எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சேலத்தில் யோவான் திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார் கொளத்தூர் மணி!

யோவான் திரைப்படத்தின் டீசரை திராவிட விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டார்.தொடர்ந்து விழாவிற்கு வந்த அனைவருக்கும் டீசர் ஒளிபரப்பப்பட்டது.

News image
Updated On :17 ஜூன் 2023, 4:52 am

DIN


சேலம்: யோவான் திரைப்படத்தின் டீசரை திராவிட விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டார். தொடர்ந்து விழாவிற்கு வந்த அனைவருக்கும் டீசர் ஒளிபரப்பப்பட்டது.

நூற்றுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் வில்லன் நடிகராகவும், குணசித்திர நடிகராகவும், உதவி இயக்குநராகவும் வலம்வந்த சேரன் ராஜா தயாரிப்பில் உருவான யோவான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இந்த விழாவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு யோவான் திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார். தொடர்ந்து விழாவிற்கு வந்த அனைவருக்கும் டீசர் ஒளிபரப்பப்பட்டது

இதனைத் தொடர்ந்து படத்தின் கதாநாயகன் அனிருத், நகைச்சுவை நடிகர் பெஞ்சமின், இசையமைப்பாளர் நந்தகோபால், ஒளிப்பதிவாளர் கார்த்தி உள்ளிட்ட படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டு யோவான் உருவான விதம் குறித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த யோவான் திரைப்படத்தின் இயக்குநர் சேரன் ராஜா, இந்த திரைப்படம் தொலைநோக்கு பார்வையில் சமுதாய கருத்துகளோடு சமுதாயத்தில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டி விழிப்புணர்வுக்காக சிறிய பட்ஜெட்டில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் இடம் பெற்றுள்ள நடிகர்கள் தங்கள் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர் என்றும் இது ஒரு வெற்றி படமாக அமையும் என்றும் தெரிவித்தார்.

மேலும் புதிய புதிய இளம் நடிகர்களை வைத்து அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் எதிர்காலத்தில் புதிய படங்கள் அமையும் என்றும் புதிய புதிய கதைகளோடு படங்கள் தருவதில் ஆர்வத்தோடு இருப்பதாகவும் இரவு பகலாக இந்த படம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் பெரும்பாலும் இந்த படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டதாகவும் சேலத்தை மையமாக வைத்து சேலத்தைச் சார்ந்த பெரும்பாலான நடிகர்களை கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாவும், இது வெற்றி படமாக அமையும் என்று இயக்குநர் சேரன் ராஜா தெரிவித்தார். 

இந்த திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள், துணை நடிகர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.