12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

சென்னை மழை பாதிப்பு: புகார் எண் அறிவிப்பு

மழை பாதிப்பு குறித்து புகார்களை தெரிவிக்க உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

படம்: ட்விட்டர்/சென்னை மாநகராட்சி

Published On :

சென்னை: மழை பாதிப்பு குறித்து புகார்களை தெரிவிக்க உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சில இடங்களில் நீர் தேங்கியுள்ளது.

மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளதால், பல்வேறு இடங்களில் நீர் தேக்கம் இல்லையென்றாலும், மெட்ரோ பணிகள் நடைபெறும் சில இடங்களிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளன.

மேலும், மழைநீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வரும் சூழலில், குடிநீர் வழங்கல், கழிவு நீர் அகற்றம் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாநகராட்சி நிர்வாகம் எண்களை அறிவித்துள்ளன.

மழைநீர் பாதிப்புகளுக்கு 1913, மழைநீர் அகற்ற 044 4567 4567, குடிநீர் வாரியத்தை தொடர்பு கொள்ள 1916 ஆகிய எண்களில் அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.