பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் பழமையான தமிழ்நாடு என்ற மாநிலம் இல்லாமல்போய்விடும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் காட்டூரில் ரூ.12 கோடி மதிப்பில் 7 ஆயிரம் சதுரடியில் அமைக்கப்பட்ட கலைஞர் கோட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திருவாரூர் ஆழித்தேர் வடிவில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், திருமண அரங்குகள், அருங்காட்சியகம், நூலகம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், நானும் சகோதரி செல்வியும் இந்த நிலத்தை வாங்கினோம். கடும் சிரமங்களுக்கு பின் இந்த கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு உதவிய அமைச்சர் எ.வ.வேலுவிற்கு நன்றி.
என் தாய் எழுப்பிய அன்புக்கோட்டை இது. எத்தனை தொகுதிகளில் போட்டியிட்டாலும், கடைசியாக தேர் நிலைகொள்வதை போல திருவாரூர் வந்தார் கலைஞர் கருணாநிதி.
கருணாநிதி இன்னுமும் ஆள்கிறார் என்பதை கலைஞர் கோட்டம் நினைவுபடுத்தும் என உருக்கமாக பேசினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய மு.க. ஸ்டாலின், தமிழகத்தில் மதச்சார்பற்ற ஜனநாய கட்சிகள் ஒருமுகமாக செயல்பட்டு வெற்றி பெறுகிறோம். அந்த செயல்பாட்டு ஒருங்கிணைப்பு அகில இந்திய அளவில் ஏற்பட வேண்டும்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் பழமையான தமிழ்நாடு என்ற மாநிலம் இல்லாமல்போய்விடும். தமிழகத்தில் செயல்படுவது போல, இந்திய அளவிலும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செயின்ட் - கோபைன் தொழிற்சாலையைப் பார்வையிட்ட முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
நேபாளத்தில் கலவரம்: உ.பி.யில் 7 மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இன்றைய முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

மேக்மைட்ரிப் முதல் காலாண்டு லாபம் 8.6% அதிகரிப்பு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



