தூய்மைப் பணிக்கு விடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி தூய்மைப் பணியாளர்கள் தர்னா!

தருமபுரி நகராட்சியில் தூய்மைப் பணிகளுக்கு விடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தருமபுரி நகராட்சியில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள்.
தருமபுரி நகராட்சியில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள்.

தருமபுரி: தருமபுரி நகராட்சியில் தூய்மைப் பணிகளுக்கு விடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிஐடியு உள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள் சங்கம் சார்பில் தருமபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் தூய்மைப் பணி மேற்கொள்ளும் ஒப்பந்தப் பணியாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், தருமபுரி நகராட்சியில் தூய்மைப் பணிகளுக்கு விடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து நகராட்சி நிர்வாகமே நேரடியாக பணியை வழங்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் நிரந்தரப்படுத்தப்பட வேண்டும். நகராட்சியில் உள்ள 137 காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும். குறைந்தபட்ச ஊதிய அரசாணையின்படி அனைத்து தூய்மைப் பணிகளுக்கும் ரூ.596 ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

பிரதி மாதம் முதல் தேதியில் சம்பளம் வழங்கப்பட வேண்டும். வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டத்துக்கு பிடித்தம் செய்யும் தொகையை முறையாக அந்தந்த கணக்கில் செலுத்த வேண்டும். அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை முழு நாள் விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

வேலை நேரத்தை மீறி பணி செய்ய நிர்பந்திப்பதை நிறுத்தி, 8 மணி நேர வேலையை உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com