காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இரவு நேரத்தில் பெய்த மழையால் காஞ்சிபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வானிலை மையம் அறிவிப்பின் படி, கடந்த 2 நாள்களாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை பெய்து வந்தது.
இதையும் படிக்க | திருப்பூரில் சர்வதேச யோகா நாள் விழா: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
இந்த நிலையில் திடீரென இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
காஞ்சிபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு நேரத்தில் திடீரென கருமேங்கள் சூழ்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
கோடை வெப்பம் அதிக அளவில் இருந்த நிலையில் இரு நாள்களாக பெய்த மழை கோடை வெப்பம் தணிந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு நேரத்தில் பெய்த மழையால் காஞ்சிபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பைக் மீது மாடு மோதி விபத்து: கணவா் உயிரிழப்பு; மனைவி காயம்

மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றி ஏடிஎம் காா்டு மோசடி: இளைஞா் கைது

கா்நாடக முதல்வா் மாற்றம் குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்

ஜம்மு-காஷ்மீா் என்கவுன்ட்டா் விவகாரம்: நீதிபதி விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


