/

திருச்செந்தூா் முருகன் கோயிலில் ஆனி வருஷாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆனி வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

News image
Updated On :29 ஜூன் 2023, 5:50 am

DIN


திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆனி வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் வருஷாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு வருஷாபிஷேகத்தை முன்னிட்டு திருக்கோயிலில் வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு
பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து  பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமான தளத்திற்கு கொண்டுவரப்பட்டு,  காலை 9.40 மணிக்கு மூலவர், சண்முகர், வெங்கடாசலபதி, வள்ளி-தெய்வானை என வரிசையாக விமான அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் மூலவர் மற்றும் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

திருக்கோயிலில் தற்போது மெகா திட்டப் பணிகள் நடந்து வருவதால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விமான தளத்திற்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. ஆனால் கோயிலில் வழக்கம்போல் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் இரா.அருள்முருகன், இணை ஆணையர் மு.கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், வி.செந்தில்முருகன், ந.ராமதாஸ், பா.கணேசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.