காலநிலை மாற்றம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

காலநிலை மாற்ற நிர்வாக குழுவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. 
மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)
மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)

காலநிலை மாற்ற நிர்வாக குழுவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், துறை சார்ந்த செயலாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். 

காலநிலை மாற்ற நிர்வாகக் குழு 2022ஆம் ஆண்டு அக்டோபரில் அமைக்கப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது, காடுகளின் பரப்பளவை அதிகரிப்பது, ஆலைக் கழிவுகளை தடுப்பது, விலங்கினங்களை பராமரிப்பது போன்றவற்றுக்கான திட்டங்களை வழங்குவது இந்தக் குழுவின் பணியாகவுள்ளது.

இந்தக் குழுவில் மான்டெக் சிங் அலுவாலியா, விஞ்ஞானி செளமியா சாமிநாதன், எரிக், ராம்கோ நிறுவனத்தின் நிர்மலா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

அனல்மின் நிலையம் மூலம் மாசு ஏற்படுவது குறித்து ஆலோசிக்க மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆலைகளின் மூலம் ஏற்படும் மாசு குறித்து ஆலோசிக்க தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com