தனியார் பேருந்து முடிவை கைவிடக் கோரி 9 தொழிற்சங்கங்கள் முதல்வருக்கு கடிதம்

சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்கும் முடிவை கைவிடக் கோரி தொமுச உள்ளிட்ட 9 தொழிற்சங்க கூட்டமைப்புகள் சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தனியார் பேருந்து முடிவை கைவிடக் கோரி 9 தொழிற்சங்கங்கள் முதல்வருக்கு கடிதம்

சென்னை: சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்கும் முடிவை கைவிடக் கோரி தொமுச உள்ளிட்ட 9 தொழிற்சங்க கூட்டமைப்புகள் சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்கும் முடிவுக்கு தொமுச உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இது குறித்து தொமுச உள்ளிட்ட 9 தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் முதல்வருக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில், ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை இயக்கும் முடிவைப் பெற வேண்டும். ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்பப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கக் கூடாது. தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்த போதுதான் பேருந்துகள் அரசுடைமையாக்கப்பட்டன என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில், தொமுச, சிஐடியூ, ஏடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட 9 தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூட்டாக கையெழுத்திட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com