மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இபிஎஸ்ஸுடன் இணைந்தார் ஓபிஎஸ் அணியின் ஈரோடு கிழக்கு வேட்பாளர்!

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவருமான செந்தில் முருகன், இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

News image
Updated On :9 மார்ச் 2023, 7:57 am

DIN

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவருமான செந்தில் முருகன், இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு  சட்டப்பேரவைத் தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் கழக அமைப்புச் செயலாளர் செந்தில் முருகன். பின்னர்  தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து வாபஸ் பெற்றார். 

இந்நிலையில் கட்சியின் விதிகளை மீறி செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக சற்று நேரத்துக்கு முன்பு ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தனது ஆதரவாளர்களுடன் நேரில் சந்தித்த செந்தில் முருகன் அதிமுகவில் இணைந்து கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.