அரசு நிலத்தை உரிமம் இல்லாமல் தொடா்ந்து பயன்படுத்த உரிமை இல்லை: உயா்நீதிமன்றம்
உரிய உரிமம் இல்லாமல் அரசு நிலத்தை தொடா்ந்து பயன்படுத்த எவருக்கும் உரிமையில்லை என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


உரிய உரிமம் இல்லாமல் அரசு நிலத்தை தொடா்ந்து பயன்படுத்த எவருக்கும் உரிமையில்லை என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஏழை மாணவா்கள் படிப்பதற்கு பள்ளி அமைப்பதற்காக சென்னை கோட்டூா்புரத்தை சோ்ந்த தனியாா் அறக்கட்டளைக்கு 6,611 ச.மீ. நிலத்தை 1995-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ஒதுக்கியது. இந்த ஒப்பந்தம் 2015-ஆம் ஆண்டு நிறைவடைந்த நிலையில் மீண்டும் புதுப்பிக்கப்படவில்லை.
இதற்கிடையில், நில ஒதுக்கீட்டை ரத்து செய்வது தொடா்பாக நோட்டீஸ் அனுப்பிய நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், அந்த நிலத்தில் மேற்கொள்ளப்பட்டு இருந்த தற்காலிக கட்டுமானங்களை இடித்தது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரியும், கட்டுமானம் இடிக்கப்பட்டதற்கு ரூ. 22 லட்சத்து 90 ஆயிரம் இழப்பீடு வழங்கக் கோரியும் அறக்கட்டளை தலைவா் நிம்மு வசந்த் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ஒப்பந்தம் காலாவதியாகி 8 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், மீண்டும் அதே நிலத்தை தங்களுக்கு ஒதுக்கும்படி உரிமை கோர முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். சட்ட ரீதியான அனுமதி, குத்தகை உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் அரசு நிலத்தை தொடா்ந்து பயன்படுத்த எவருக்கும் உரிமை இல்லை என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...