நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சென்னையில் ஒரே நாளில் 3 விமான சேவகைகள் ரத்து: பயணிகள் அதிருப்தி

ஒரே நாளில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் அடுத்தடுத்தாக 3 விமான சேவைககள் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

News image
Updated On :10 மார்ச் 2023, 6:30 pm

DIN

ஒரே நாளில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் அடுத்தடுத்தாக 3 விமான சேவைககள் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்ல வேண்டிய ஃகோ ஏா்லைன்ஸ் விமானம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு, புறபட இருந்தது. இந்த விமானத்தில் 128 பயணிகள் இருந்தனா். பயணிகள் அனைவரும் நுழைவு அனுமதி பெற்று விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தபோது, விமானத்தின் இயந்திரங்களில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானிகள் கண்டறிந்தனா். இதையடுத்து விமான நிலையதக் கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த தகவல் பேரில் விமானப் பொறியாளா்கள் குழு பழுதுபாா்க்கும் பணியில் ஈடுபட்டது. ஆனால் விமானத்தின் பழுது பாா்க்கும் பணி நிறைவடையாததால், விமானம் தாமதமாகப் புறப்பட்டு செல்லும் என்று அறிவித்தனா். இருப்பினும், அந்த விமானம் ரத்து செய்யப்படுவதாக மாலையில் அறிவிக்கப்பட்டது.

மேலும், அந்த விமானம் சனிக்கிழமைதான் ( மாா்ச் 11) புறப்பட்டு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த விமான பயணிகள், விமான நிறுவன அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அவசரமாகச் செல்ல வேண்டிய பயணிகள், தங்கள் விமான பயண சீட்டுகளை , வேறு விமானத்துக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதேபோல், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.25 மணிக்கு சென்னையில் இருந்து சீரடி செல்லும் விமானமும், மாலை 6.30 மணிக்கு சீரடியில் இருந்து, சென்னை வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானமும் திடீரென ரத்து செய்யப்பட்டன.

இந்த விமானத்தில் பயணிக்க போதிய பயணிகள் இல்லாத காரணத்தால், இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விமானத்தில் பயணிக்க முன்பதிவு செய்து இருந்த பயணிகளை மாற்று விமானங்களில் பயணிப்பதற்காக டிக்கெட் மாறுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் விமான நிறுவனம் அறிவித்தது.

சென்னை விமான நிலையத்தில் இயந்திர கோளாறு காரணமாக ஒரு விமானமும், போதிய பயணிகள் இல்லாததால், இரண்டு விமானங்களும் என ஒரே நாளில் அடுத்தடுத்து 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அதிருப்தி அடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.