பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பொதுத் தேர்வு: மாணவர்கள், ஆசிரியர்கள் செல்போன் கொண்டுவரத் தடை

தமிழகத்தில் பொதுத் தேர்வு எழுத வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செல்போன் கொண்டுவரத் தடை விதித்து தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

News image
பள்ளிக்கல்வித்துறை
Updated On :10 மார்ச் 2023, 8:28 am

DIN

தமிழகத்தில் பொதுத் தேர்வு எழுத வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செல்போன் கொண்டுவரத் தடை விதித்து அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ஆம் தேதியும், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மார்ச் 14-ஆம் தேதியும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ஆம் தேதியும் பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. ஏப்ரல் 20 வரை தேர்வுகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்கள் செல்போன் மற்றும் தகவல் தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்த தடை விதித்து தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், தேர்வு அறைக்குள் ஆசிரியர்களும் செல்போன் மற்றும் தகவல் தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடையை மீறி செல்போன் பயன்படுத்தும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.