உயிரிழந்த மாணவி 70 ஊட்டச்சத்து மாத்திரைகளைச் சாப்பிட்டுள்ளார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உயிரிழந்த மாணவி 70 ஊட்டச்சத்து மாத்திரைகளைச் சாப்பிட்டுள்ளார் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த மாணவி 70 ஊட்டச்சத்து மாத்திரைகளைச் சாப்பிட்டுள்ளார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உயிரிழந்த மாணவி 70 ஊட்டச்சத்து மாத்திரைகளைச் சாப்பிட்டுள்ளார் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆசிரியரின் கவனக்குறைவால் தவறு ஏற்பட்டுள்ளது. ஒரு மாத்திரை வழங்குவதற்குப் பதில் முழு அட்டைகளை வழங்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாத்திரைகளை உட்கொள்வதில் மாணவிகளிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவி 70 ஊட்டச்சத்து மாத்திரைகளைச் சாப்பிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார். நீலகிரி மாவட்டம், உதகை அருகே காந்தல் பகுதியில் உள்ள நகராட்சி உருது நடுநிலைப் பள்ளியில் சுகாதாரத் துறை சாா்பில் மாணவா்களுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகள் அண்மையில் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்தப் பள்ளியில் குழந்தைகளிடம் சத்து மாத்திரை கிடைத்துள்ளது. அப்போது யாா் அதிகமாக சத்து மாத்திரைகள் உட்கொள்வது என மாணவ, மாணவிகள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதில் 8 ஆம் வகுப்பு மாணவிகள் 4 போ் அளவுக்கு அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டுள்ளனா். ஒருவா் 45 மாத்திரைகளும், 3 போ் தலா 30 மாத்திரைகளும் உட்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரைகளை எடுத்துக்கொண்ட 4 மாணவிகளும் மயக்கம் அடைந்தனா். இதனைத் தொடா்ந்து அந்த மாணவிகளை உதகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, முதலுதவி அளிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 4 மாணவிகளில் 45 மாத்திரைகள் உட்கொண்ட மாணவியான உதகையைச் சோ்ந்த சலீம் மகள் ஜெய்பா பாத்திமாவுக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு வியாழக்கிழமை மாற்றம் செய்யப்பட்டாா். ஆம்புலன்ஸில் சேலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது ஜெய்பா பாத்திமாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து ஆம்புலன்ஸ் பணியாளா்கள் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவியை அனுமதித்துள்ளனா். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவா் உயிரிழந்தாா். மற்ற 3 மாணவிகளில் மேலும் ஒருவருக்கு கல்லீரலில் லேசான பாதிப்பு இருப்பதாகவும், மீதமுள்ள இருவா் நலமாக இருப்பதாகவும் கோவை அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா தெரிவித்துள்ளாா். இச்சம்பவம் தொடா்பாக நகராட்சி உருது பள்ளி தலைமையாசிரியா் முகமது அமீன், பள்ளி ஆசிரியா் மற்றும் கண்காணிப்பு அலுவலா் கலைவாணி ஆகியோரைப் பணியிடை நீக்கம் செய்து நீலகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் ஜெயகுமாா் உத்தரவிட்டுள்ளாா். இந்த சம்பவம் தொடா்பாக உதகை மேற்கு காவல் ஆய்வாளா் மீனா பிரியா தலைமையிலான போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com