யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஆம்பூர் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து: 2 பேர் பலி

ஆம்பூர் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :10 மார்ச் 2023, 7:11 am

DIN

ஆம்பூர் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதணுர்  பகுதியை சேர்ந்த பரத், யஷ்வந்த், மற்றும் கௌதம் ஆகியோர்  மாதனுரில் இருந்து ஒடுகத்துர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஒடுகத்தூர் நோக்கி ஒரே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பாலூர் பகுதியில் சாலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம்  நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியின் பின் புறமாக மோதிய போது தூக்கி வீசப்பட்டதில் பரத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானர்.

மேலும் படுகாயம் அடைந்த இருவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் கௌதம் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே பலியானார். படுகாயங்களுடன் யஷ்வந்த் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் விபத்தில் உயிரிழந்த பரத், கௌதம் ஆகியோரின் உடல்களை மீட்ட காவல் துறையினர் விபத்து குறித்து  வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்பூர் அருகே சாலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி இளைஞர்கள்  உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.