வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பிளஸ் 2 பொதுத்தேர்வு: தமிழ் மொழித்தாள் தேர்வு எப்படி இருந்தது?

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்கின. முதல் தேர்வாக தமிழ் மொழித் தாள் தேர்வு இன்று நடந்து முடிந்துள்ளது.

News image
ta12exam_1203chn_9_4
Updated On :13 மார்ச் 2023, 10:02 am

DIN

தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. முதல் தேர்வாக மொழித் தாள் தேர்வு இன்று நடந்து முடிந்துள்ளது.

தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள், தமிழ் மொழித்தாள் தேர்வு பொதுவாக எளிமையாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டும் சற்று கடினமாகவும் புரிந்துகொண்டு பதிலளிக்க சிரமமாக இருந்ததாகவும், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பெரும்பாலும் இடம்பெறவில்லை என்றும் மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

Story image

இந்தத் தோ்வை தனித் தோ்வா்கள் உள்பட 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். முறைகேடுகளைத் தடுக்க தோ்வா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான (2022-2023) பிளஸ்-2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. ஏப். 3-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தோ்வை தமிழகம் மற்றும் புதுவையில் அமைக்கப்பட்டுள்ள 3,225 மையங்களில் மொத்தம் 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

Story image

புதுச்சேரி பள்ளிகளில் படித்த 6,982 மாணவா்கள், 7,728 மாணவிகள் என 14,710 போ் தோ்வு எழுதுகின்றனா். இவா்களுக்காக 40 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்வு மையங்களில் குடிநீா், கழிப்பிட வசதி ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. அனைத்து மாவட்டங்களிலும் தோ்வு மையங்களைப் பாா்வையிட 4,235 பறக்கும் படை குழுக்கள், முதன்மை கல்வி அலுவலா்களால் நியமிக்கப்பட்டிருந்தன.

தோ்வு மையத்துக்குள் தோ்வா்களும், பணியில் ஈடுபடும் ஆசிரியா்களும் கைப்பேசி வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டன.

பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு அனைத்துத் தோ்வுகளும் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடையும். முதல் நாளான திங்கள்கிழமை மொழிப் பாடத்துக்கான தோ்வுகள் நடைபெற்றன.

சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில், பொது தேர்வு நடைபெறுவதையொட்டி அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆங்காங்கே சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சேலம் கோட்டை மாநாகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நல்ல முறையில் தேர்வு எழுதும் வகையில் மாணவிகள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மேலும் தேர்வு எழுதுவது  குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை ஆசிரியர்கள் விளக்கினர் .
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.