ஈரோடு: ஈரோடு அருகே வாகன சோதனையில் 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக காவல் துறையினர் இருவரை கைது செய்தனர்.
சென்னிமலை, ஈங்கூர் ரயில்வே நிலைய சாலை அருகே வாகன தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது, வாகனத்தில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வாகனத்தில் இருந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில், இங்குள்ள ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து அரிசியை சேகரித்து, வட இந்திய தொழிலாளர்களுக்கு பிரீமியம் விலைக்கு விற்க திட்டமிட்டதை இருவரும் ஒப்புக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குண்ணம், கீரநல்லூா் ஊராட்சிகளில் இலவச வீட்டுமனை பட்டா கோரி ஜமாபந்தியில் மனு

மராத்திய மொழி தெரியாத ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை: மகாராஷ்டிர அரசு

ரிலையன்ஸ் குழும பொறுப்புகள் வாரிசுகளிடம் ஒப்படைப்பு: முகேஷ் அம்பானி தகவல்







