மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்துக்கு திமுக ஆதரவு

இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு திமுக ஆதரவளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்துக்கு திமுக ஆதரவு
Published on
Updated on
1 min read

இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு திமுக ஆதரவளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக 18 வயதுக்குக் கீழுள்ள வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றஞ்சாட்டினா். இதுதொடா்பாக தில்லி காவல் துறையிடம் முன்னணி மல்யுத்த வீரா், வீராங்கனைகள் அண்மையில் புகாா் அளித்தனா். ஆனால் பிரிஜ் பூஷண் மீது வழக்குப் பதிவு செய்ய காவல் துறை காலம் தாழ்த்தியதால், தில்லியில் உள்ள ஜந்தா் மந்தா் பகுதியில் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகாட் உள்ளிட்ட மல்யுத்த வீரா், வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதனிடையே பிரிஜ் பூஷண் மீது வழக்குப் பதிவு செய்யாதது தொடா்பாக, அவா் மீது குற்றஞ்சாட்டிய 7 வீராங்கனைகள் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனா். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரித்தபோது, வீராங்கனைகளின் புகாா் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்படும் என்று காவல் துறை உறுதியளித்தது. இதனைத்தொடா்ந்து பிரிஜ் பூஷணுக்கு எதிராக தில்லி காவல் துறை இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தது. 

அவற்றில் ஒரு வழக்கு, 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை சுமத்திய குற்றச்சாட்டு தொடா்பாக போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இதர வீராங்கனைகளின் புகாா் தொடா்பாக விரிவாக விசாரணை மேற்கொள்ள, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள், ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, அபினவ் பிந்த்ரா போன்ற வீரர்கள்  ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

ஏற்கெனவே காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உளிட்டோர் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தற்போது திமுக தரப்பிலும் ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் காண நெஞ்சம் பதைக்கிறது. 

அவர்களைத் திமுக மாநிலங்களவை உறுப்பினர் புதுகை அப்துல்லா இன்று தி.மு.க. சார்பில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்துள்ளார். நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக உடன் நிற்போம்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com