ஏப்ரலில் குறைந்த மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை!

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 66.85 லட்சம் பயணிகள் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 66.85 லட்சம் பயணிகள் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் 66,07,458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63,69,282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69,99,341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 66,85,432 பயணிகளும் பயணித்துள்ளனர். 

ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக ஏப்.28 அன்று 2,68,680 பேர் மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர். 

மேலும் ஏப்ரலில் மொத்தமுள்ள 66.85 லட்சம் பேரில் 23.39 பேர் க்யூஆர் கோடு மூலமாக டிக்கெட் எடுத்துள்ளனர். 39.83 லட்சம் பேர் பயண அட்டை மூலமாகவும் 3.56 லட்சம் பேர் டோக்கன் மூலமாகவும் 4,136 பேர் குழு பயண அட்டை மூலமாகவும் பயணம் மேற்கொண்டுள்ளனர். 

இதில் 1,964 பேர் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சிங்கார சென்னை அடையாள அட்டையைக் கொண்டு பயணித்துள்ளனர்.

ஐபிஎல் சீசனையொட்டி சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், மெட்ரோவில் இலவச பயணங்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com