அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு யாமறியோம் பராபரமே என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே சில அமைச்சர்களின் துறைகள் மாற்றி அமைக்கப்பட்டன.
இதற்கிடையே, கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது பல்வேறு முக்கிய பிரச்னைகள் ஆலோசிக்கப்பட்ட நிலையில், அமைச்சரவை மாற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மூத்த அமைச்சரும் திமுகவின் பொதுச் செயலாளருமான துரைமுருகன் இன்று நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் இன்று ஆளுநரை சந்திக்க போவதாக வெளியான தகவலை மறுத்துள்ளார். மேலும், அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு யாமறியோம் பராபரமே என்று விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து முடிவு செய்ய வேண்டியது முதல்வர்தான் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொறடா உத்தரவை மீறியது தவறு: மன்னிப்பு கோரி ஓ.எஸ். மணியன் கடிதம்!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.73! 47 காசுகள் சரிவு!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



