தமிழக அமைச்சராக பதவியேற்கவுள்ள மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டு, டி.ஆர்.பி. ராஜாவை சேர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று ஒப்புதல் வழங்கினார்.
இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டை இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து டி.ஆர்.பி. ராஜா வாழ்த்துப் பெற்றார்.
ஆளுநர் மாளிகையில் நாளை காலை 10.30 மணிக்கு டி.ஆர்.பி. ராஜாவின் பதவியேற்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவியேற்பு விழாவின்போது டி.ஆர்.பி. ராஜாவுக்கு வழங்கப்படும் இலாகா வெளியிடப்படும்.
மேலும், தமிழக அமைச்சரவையில் சில அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.