ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கொச்சுவேலி-ஹைதராபாத், கோவா: மே 19-இல் பாரத் கௌரவ் ரயில் சேவை

கொச்சுவேலியிலிருந்து ஹைதராபாத், கோவா உள்ளிட்ட பகுதிகளுக்கு மே 19-ஆம் தேதி பாரத் கௌரவ் விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.

News image
Updated On :11 மே 2023, 7:58 pm

DIN

கொச்சுவேலியிலிருந்து ஹைதராபாத், கோவா உள்ளிட்ட பகுதிகளுக்கு மே 19-ஆம் தேதி பாரத் கௌரவ் விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.

இந்திய சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில் பாரத் கௌரவ் ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் கேரளத்தின் கொச்சுவேலியிலிருந்து ஹைதராபாத், கோவா உள்ளிட்ட பகுதிகளுக்கு மே 19-ஆம் தேதி ‘எஸ்இசட்பிஜி02’ (நழஆஎ02) எனும் பாரத் கௌரவ் ரயில் இயக்கப்படவுள்ளது.

கொச்சுவேலியிலிருந்து மே 19-ஆம் தேதி காலை 9.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் எா்ணாகுளம், பாலக்காடு, சேலம், ரேணிகுண்டா வழியாக மறுநாள் மாலை 5 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும்.

பின்னா், ஹைதராபாதிலிருந்து மே 22-ஆம் தேதி இரவு 8 மணிக்கு புறப்பட்டு ஆக்ரா, தில்லி, ஜெய்ப்பூா், கோவா, மங்களூா் வழியாக மே 30-ஆம் தேதி மீண்டும் கொச்சுவேலி வந்தடையும்.

இதில் குளிா்சாதனப் பெட்டிகள்-3, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள்-7 ஆகியவை உள்ளன. இணையதள முகவரியில் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.