2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

நடிகர் விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம்: செல்லூர் ராஜு

பாஜகவும், காங்கிரஸும் அதிமுகவுக்கு நண்பர்கள், எப்போது வேண்டுமானாலும் யாரையும் கூட்டணியில் சேர்த்துக்கொள்வோம், திமுக மட்டுமே ஒரே எதிரி என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

News image
Updated On :12 மே 2023, 11:46 am

DIN

பாஜகவும், காங்கிரஸும் அதிமுகவுக்கு நண்பர்கள், எப்போது வேண்டுமானாலும் யாரையும் கூட்டணியில் சேர்த்துக்கொள்வோம், திமுக மட்டுமே ஒரே எதிரி என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொண்டர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், அமைச்சர் பி.டி.ஆரிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டதற்கு 30,000 கோடி ரூபாய் ஆடியோதான் காரணம். தவளை தன் வாயால் கெடும் என்பதுபோல பி.டி.ஆர். கெட்டுள்ளார். மதுரை மாடு பிடிபட்டது, இப்போது அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினால், ஆடியோ விவகாரம் உண்மையாகி விடும் என சாதாரண ஒரு இலாகாவை கொடுத்துள்ளனர்.

நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்று உள்ள தங்கம் தென்னரசு மிகச்சிறந்த நிர்வாகி. எந்தத் துறையிலும் அவர் முத்திரை பதிக்கக் கூடியவர். இன்றுள்ள அமைச்சர்களில், பிறரை தரக் குறைவாக பேசாதவர். நிதித் துறையிலும் அவர் சிறப்பாக செயல்படுவார். அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள்' என்றார். 

ஓபிஎஸ் இல்லாமல் எடப்பாடி பழனிசாமியால் முதலமைச்சர் ஆகியிருக்க முடியாது என்ற வைத்தியலிங்கம் கருத்துக்கு, 'எதிர் முகாமில் உள்ளவர்கள் அப்படிதான் சொல்வார்கள். பொறுத்திருந்து பாருங்கள், எடப்பாடி தலைமையில்தான் ஆட்சி அமைப்போம்' என்று பதில் அளித்தார்.

YouTube video thumbnail

கூட்டணி தொடர்பான கேள்விக்கு, எங்களுடைய ஒரே அரசியல் எதிரி திமுக மட்டும்தான். பாஜகவும், காங்கிரஸும் எங்கள் நண்பர்கள்தான். எப்போது வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம் என்றார். 

விஜயின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஒரு சில படங்கள் ஹிட் கொடுத்த விஷாலே அரசியலுக்கு வருகிறேன் என சொல்லும்போது, பல படங்கள் ஹிட் கொடுத்த விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம். 

கமல்கூட மக்களுக்கு நல்லது செய்யப்போவதாக சொல்லித்தான் மக்கள் நீதி மய்யம் என கட்சி ஆரம்பித்தார். இப்போது நீதியும், மய்யமும் எங்கே போனது எனத் தெரியவில்லை. எனவே, விஜய் அரசியலுக்கு வந்து தேர்தலை சந்திக்கட்டும். அதன் பின்னரே அவருடைய செயல்பாடுகள் குறித்தும், அவருடன் கூட்டணி வைப்பதா என்பது குறித்தும் சொல்ல முடியும் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.