சிபிஎஸ்இ +2 தேர்வில் 497 மதிப்பெண் பெற்று வேலூர் மாணவி முதலிடம்

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி 500க்கு 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
மாணவி  ரேஹா சுந்தரேசன் ராஜ்
மாணவி ரேஹா சுந்தரேசன் ராஜ்

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி 500க்கு 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழக அளவில் முதலிடம் பிடித்த வேலூர் மாணவி ரேஹா சுந்தரேசன் ராஜை, அவரது பள்ளி ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.

நடந்து முடிந்த 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ பள்ளிகளின் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள (ஷிருஷ்டி சிபிஎஸ்இ பள்ளி) தனியார் பள்ளியை சேர்ந்த ரேஹா சுந்தரேசன் ராஜ் என்ற மாணவி 500 க்கு 497 மதிப்பெண் பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். 

இதில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப்பிரிவில் 100/100 ம், ஆங்கிலம், கணிதம், உயிரியல் ஆகிய பாடப்பிரிவில் தலா 99/100 மதிப்பெண் பெற்றுள்ளார். 

மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்டு ஷிருக்ஷ்டி பள்ளி குழும தலைவர் சரவணன் உட்பட ஆசிரியர்கள் மாணவிக்கு பாராட்டு தெரிவித்தனர். தனது உயர்வுக்கு காரணமான ஆசிரியர்களுக்கும் மாணவி நன்றி தெரிவித்துக்கொண்டார்.

மாநில அளவில் இரண்டாவது இடத்தில் சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளியும், 3-வது இடத்தில் கோபாலபுரம் டிஏவி பள்ளியும் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com