ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்: பெரம்பலூர் முதலிடம்!

தமிழ்நாடு முழுவதும் 91.39% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டை காட்டிலும் 1.32% மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

News image
Updated On :19 மே 2023, 12:03 pm IST

தமிழ்நாடு முழுவதும் 91.39% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டை காட்டிலும் 1.32% மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10ஆம் வகுப்பில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதங்களைக் காணலாம்.
10ஆம் வகுப்பு முடிவுகளில் அதிக அளவு தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 

அதற்கு அடுத்தபடியாக விருதுநகர், சிவகங்கை மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. 

9.2 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய தேர்வில் 91.39 சதவிகிதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.  

மாணவர்களை விட மாணவிகள் 6.50 சதவீதம் தேர்ச்சி. மாணவிகள் 94.66 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.16 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

தமிழ்நாட்டில், 3,718 பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகள் 87.45% தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு உதவி பெறும் பள்ளிகளில் 92.24%, தனியார் பள்ளிகளில் 97.38% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்

பெரம்பலூர் 97.67%
சிவகங்கை 97.53%
விருதுநகர் 96.22%
கன்னியாகுமரி 95.99%
தூத்துக்குடி 95.58%
அரியலூர் 95.4%
ஈரோடு 95.57%
திருச்சி 94.82%
நெல்லை 94.19%
தென்காசி 94.12%
காஞ்சிபுரம் 90.28%
சேலம் 91.13%

முழு விபரங்களுக்கு.. இங்கே கிளிக் செய்யவும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.