சிஐடியூ போக்குவரத்து தொழிற்சங்கத்துடன் ஜூன் 9ல் அடுத்தகட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் தொழிலாளர் நல ஆணையம் சிஐடியூ போக்குவரத்து தொழிற்சங்கத்துடன் நடத்திய பேச்சில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனத்தை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்றது.
போக்குவரத்துத் துறையில் ஒப்பந்த முறையில் ஓட்டுநர்களை நியமனம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போக்குவரத்து ஊழியர்கள் மே 29 ஆம் தேதி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், போராட்டம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஈஐடி பாரி லாபம் ரூ.286.90 கோடியாக உயர்வு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.