தமிழகத்தில் 2 நாள்களுக்கு கன முதல் மிகக் கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

மழை தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது. 

இந்நிலையில், இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோன்று தெற்கு வங்கக்கடல் பகுதியிலும் ஒரு வளிமண்டல கீழக்கு சுழற்சி நிலவி வருகின்றது. 

இதன்காரணமாக தமிழகம், கேரளம், புதுச்சேரியில் நாளை கன முதல் மிகக் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை(நவ.4) கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

தமிழகம், புதுச்சேரியில் நவம்பர் 6-ம் தேதி வரை மிதமான மழை முதல் கனமழை தொடர வாய்ப்புள்ளது. 

மிகக் கனமழை 

நவம்பர் 4(சனிக்கிழமை) தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

நம்.6 வரை மழை

நவ.5-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 

இதே போல நவ.6-ம் தேதி  நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. 

தமிழகத்துக்கு ஆரஞ்ச் அலர்ட்

நாளை முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை இருக்கும் என்றும்,  வரும் 4, 5 ஆகிய தேதிகளில் தமிழகத்திற்கு கனமழை முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com