டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு- சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

News image
Updated On :3 நவம்பர் 2023, 10:48 am

DIN

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

ஹென்றி திபேன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்ததாக மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22, 23 ஆம் தேதிகளில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு, தடியடி சம்பவங்களில் 15 போ் உயிரிழந்தனா். 

இந்தச் சம்பவம் தொடா்பாக ஓய்வுபெற்ற உயா் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபா் விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.