
தூத்துக்குடி: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எண்ணம் தமிழகத்தில் பலிக்காது என திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.
தூத்துக்குடியில் மீனவர்களுக்கான நகை கடன் வழங்கும் கூட்டுறவு சங்க திறப்பு விழா தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலையில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் கனிமொழி பங்கேற்று கூட்டுறவு கடன் சங்கத்தை திறந்து வைத்து, மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையும் படிக்க | நவ.10-இல் 2 -ஆம் கட்ட உரிமைத்தொகை திட்டம் தொடக்கம்!
பின்னர் அவரிடம் செய்தியாளர்கள், திருச்சியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை இருக்காது. மக்களின் உணா்வுக்கேற்ப பாஜக இதனை செயல்படுத்தும் என கூறியது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு கனிமொழி பதிலளிக்கையில், தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தானே அதைப்பற்றி கவலைப்படுவதற்கு. எனவே அண்ணாமலையின் எண்ணம் தமிழகத்தில் பலிக்காது. ஆட்சிக்கு வந்தால் பார்ப்போம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.