சாத்தூர் அருகே கட்டுமான பணியின் போது போது சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை என்பது பெய்து வருகிறது. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. மழை காரணமாக ஆங்காங்கே ஒரு சில வீடுகள் இடிந்து. இதில் சிலர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சிந்தப்பள்ளி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்தது. இதே பகுதியில் சாத்துார் பகுதியைச் சேர்ந்த ஜனகன்(45) என்பவர் புதிதாக கட்டடம் கட்டி வருகிறார். தொடர்மழை காரணமாக விரைவாக பணியை தொடங்குவதற்காக வந்த தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது கட்டடத்தின் மேல்தளம் முழுவதுமாக இடிந்து விழுந்துள்ளது.
உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சாத்தூர் தீயணைப்புதுறையினரின் உதவியுடன் கட்டட ஈடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்டனர். இதில் கட்டட பணியில் ஈடுபட்ட சங்கர் கணேசன்,ஜெய்சங்கர், முனியாண்டி உள்ளிட்ட 6 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் சாத்தூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக சாத்தூர் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உளவாளியாக நடிக்கும் தனுஷ்?

புதிய புரட்சி! விஜய்க்கு வாழ்த்துக்கள்! தமிழிசை சௌந்தரராஜன் | BJP | TVK

முதல் விக்கெட் எடுத்த மும்பை இந்தியன்ஸ் வீரரின் வித்தியாசமான கொண்டாட்டம்..! துண்டுச் சீட்டில் இருந்தது என்ன?

இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன்: மமதா பானர்ஜி
வீடியோக்கள்

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு


