/

நவ. 14-ல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது!

காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நவம்பர் 16ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :11 நவம்பர் 2023, 2:40 pm

DIN


தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில்  வரும் 14ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நவம்பர் 16ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், நவ. 14, 15 ஆகிய தேதிகளில் கடலோர ஆந்திரம், தென்தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இடி, மின்னலுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனால், மீனவர்கள் நவ. 14, 15 ஆகிய தேதிகளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.