போன் பே செயலியில் மெட்ரோ டிக்கெட் 

போன் பே செயலி மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் வசதியை மெட்ரோ நிர்வாகம் இன்று அறிமுகம் செய்துள்ளது.
போன் பே செயலியில் மெட்ரோ டிக்கெட் 

‘போன் பே’ செயலி மூலம் மெட்ரோ பயணச்சீட்டு பெற புதிய வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயணிகள் கைப்பேசியின் வாட்ஸ் ஆப், ‘பேடிஎம்’ உள்ளிட்ட செயலிகள் மூலம் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் முறையை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் ஏற்கெனவே அறிமுகப்படுத்தி அதை செயல்படுத்தி வருகிறது. இது பயணிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ‘போன் பே’ செயலி மூலம் மெட்ரோ பயணச்சீட்டு பெறும் புதிய வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சென்னை நந்தனத்திலுள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் மு.அ.சித்திக் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி பேசியதாவது:

மே 17 முதல் நவ.15 வரையில் வாட்ஸ் ஆப் மூலம் 9,34,882 பயணிகளும், ஆக.4 முதல் நவ.15-ஆம் தேதி வரை பேடிஎம் செயலி மூலம் 9,26,301பயணிகளும் பயணச்சீட்டு பெற்று பயணித்துள்ளனா். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘போன் பே’ செயலி மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி, பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்த உதவுகிறது. மேலும், இந்த சேவை மூலம் பயணச்சீட்டு பெறுபவா்களுக்கு 20 சதவீத கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது. ஒரே நேரத்தில் ஆறு நபா்களுக்கு பயணச்சீட்டு பதிவு செய்யலாம் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநா்கள், ராஜேஷ் சதுா்வேதி (இயக்கம் மற்றும் அமைப்புகள்), தி.அா்ச்சுனன் (திட்டங்கள்), பிரசன்ன குமாா் ஆச்சாா்யா (நிதி) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com