அமெரிக்காவுக்கு விசா பெற போலி சான்றிதழ் தயாரித்தவர் கைது!

அமெரிக்க துணை தூதரகத்தில் நுழைவு இசைவு பெறுவதற்காக போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து கொடுத்த ஆந்திராவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு விசா பெற போலி சான்றிதழ் தயாரித்தவர் கைது!
அமெரிக்காவுக்கு விசா பெற போலி சான்றிதழ் தயாரித்தவர் கைது!
Published on
Updated on
2 min read

அமெரிக்க துணை தூதரகத்தில் நுழைவு இசைவு பெறுவதற்காக போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து கொடுத்த ஆந்திராவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 24 வயதான ஹேம்நாத் என்பவர் தனது மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்ல விசா கேட்டு சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 16-ஆம் தேதி சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் நேர்முகத் தேர்விற்காக ஹேம்நாத் வந்துள்ளார். அப்போது அவரது ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்த போது  அதிலிருந்த பி.டெக் சான்றிதழ்கள் போலியானது என அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க துணை தூதராக அதிகாரிகள், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்தனர். புகாரின் அடிப்படையில் மாணவர் ஹேம்நாத்தை பிடித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், நரசராவ் பேட்டை பிரகாஷ் நகர் பகுதியை சேர்ந்த ஹரிபாபு என்பவர் போலி மதிப்பெண் சான்றிதழ்களை தயார் செய்து கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் செந்தில்குமாரி மேற்பார்வையில் தனிப்படைகள் அமைத்து நரசராவ்பேட்டைக்கு சென்று ஹரிபாபு(35) என்ற நபரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், பட்டப் படிப்பை முடித்துவிட்டு மும்பையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும், அதன்பிறகு அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சொந்த ஊரில் எக்கோ ஓவர்சீஸ் கன்சல்டன்சி(ECCHO overseas consultancy) என்ற பெயரில் அலுவலகம் ஒன்று தொடங்கியது தெரியவந்துள்ளது.

மேலும் வெளிநாடு செல்பவர்களுக்கு போலியான கல்வி சான்றிதழ் தயார் செய்து கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரது அலுவலகத்தில் சோதனை செய்து கணினி, செல்போன் உள்ளிட்ட பொருள்களையும், ரூ. 2 லட்சம் பணம் மற்றும் சில ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து ஹரிபாபு மீது வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் மாணவனர் ஹேமநாத் என்பவர் மீதும் வழக்கு பதிய வாய்ப்புள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com