
கோவை: மோசமான வானிலை காரணமாக கள்ளிக்கோட்டைக்குச் செல்ல வேண்டிய ஷார்ஜா விமானம் கோவையில் தரையிறங்கியது. பின்னர் 9.20 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டுச் சென்றது.
வானிலை மோசமாக இருந்ததால் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஷார்ஜாவில் இருந்து கள்ளிக்கோட்டை செல்ல வேண்டிய ஏர் அரேபியா விமானம் அங்கு தரையிறங்க முடியாத காரணத்தால் கோவை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இந்த விமானத்தில் 170 பயணிகள் உள்ளனர். கள்ளிக்கோட்டையில் இன்னும் தட்பவெப்பநிலை சரியாகும்வரை, கோவையில் தரையிறங்கிய விமானத்தில் பயணிகள் அனைவரும் விமானத்தின் உள்ளேயே இருந்தனர்.
இதையும் படிக்க.. பிப்ரவரியில் படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயில்சேவை?
பின்னர், கள்ளிக்கோட்டையில் வானிலை சீரடைந்தததால், ஏர் அரேபியா விமானம் காலை 9.20 மணிக்கு கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கள்ளிக்கோட்டை புறப்பட்டுச் சென்றது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.