திருமூர்த்தி அணை பிரதான கால்வாயில் உடைப்பு

திருமூர்த்தி அணையிலிருந்து நான்காம் மண்டல பாசனத்திற்கு உயிர் தண்ணீர் வழங்கப்பட்டு வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை பிரதான கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
திருமூர்த்தி அணை பிரதான கால்வாயில் உடைப்பு


திருமூர்த்தி அணையிலிருந்து நான்காம் மண்டல பாசனத்திற்கு உயிர் தண்ணீர் வழங்கப்பட்டு வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை பிரதான கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

பரம்பிக்குளம்-ஆழியாறு எனும் பிஏபி திட்டத்தில் ஆழியாறு அணையிலிருந்து 50 ஆயிரம் ஏக்கரும், திருமூர்த்தி அணையிலிருந்து 3.77 லட்சம் ஏக்கரும் பாசன வசதிபெறுகின்றன. 

இதுதவிர கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் 22 ஆயிரம் ஏக்கரும் பயன்பெறுகின்றன.

பிஏபி திட்டத்தில் வழக்கமாக தென்மேற்கு பருவமழையில் தொகுப்பு அணைகள் நிரம்பிவிடும். ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பெய்யாததால் தொகுப்பு அணைகள் நிரம்பவில்லை. தொகுப்பு அணைகள் அனைத்திலும் சேர்த்து பயன்படுத்த கூடிய அளவு தண்ணீர் 8 டிஎம்சி அளவு மட்டுமே உள்ளது. தண்ணீர் மிகக்குறைந்த அளவே இருப்பதால் நான்காம் மண்டலத்திற்கு இந்த ஆண்டு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்ட சூழ்நிலையில் உயிர் தண்ணீர் கடந்த 20 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் பிஏபி பிரதான கால்வாயில் பூசாரிப்பட்டி அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளது. உடைப்பு ஏற்பட்ட பகுதியை பிஏபி திட்ட குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் மற்றும் நிர்வாகிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 

பிரதான கால்வாயில் ஏற்பட்ட உடைப்பால், அணையிலிருந்து கிடைக்கும் குறைந்த தண்ணீரும் பயன்படுத்த முடியாமல் போய்விடுமோ என விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com