ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

அண்ணாமலைப் பல்கலை மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மாணவா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்றார்.

பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

Published On :

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மாணவா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்றார்.

நிகழ்ச்சிக்கு துணைவேந்தர் ராம.கதிரேசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பதக்கங்கள் வென்ற பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நடத்தினார். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஆளுநர் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள நந்தனாா் பிறந்த ஊரான ம.ஆதனூா் கிராமத்துக்கு சென்று நந்தனாா் குருபூஜை விழாவில் பங்கேற்றார். 

பின்னர் பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் புதன்கிழமை மாலை நடைபெறும் அண்ணாமலைப் பல்கலைக்கழக 85 ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறாா். இரவில் காா் மூலம் புதுச்சேரி வழியாக சென்னை செல்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.