மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாமக்கல்லில் 50 சிலிண்டர்களுடன் எரிந்த சரக்கு வாகனம்!

நாமக்கலில் 50 சிலிண்டர்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது.

News image
Updated On :6 அக்டோபர் 2023, 11:27 am

DIN

நாமக்கல்: நாமக்கலில் 50 சிலிண்டர்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது.

நாமக்கல் அருகே பொம்மைக்குட்டைமேடு பகுதியில், மீனா என்ற பெயரில் தனியார் எரிவாயு நிரப்பும்  நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலியான வணிக சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பப்படும். அந்த வகையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமார் 1:30 மணி அளவில், ஈரோடு சாஸ்திரி நகரிலிருந்து 50 காலி எரிவாயு சிலிண்டர்களுடன் நாமக்கல் நோக்கி சரக்கு வாகனம் வந்து கொண்டிருந்தது. இதனை ஈரோட்டை சேர்ந்த கார்த்திக் (32) என்பவர் ஓட்டி வந்தார். 

Story image

நாமக்கல் பொரசைப்பாளையம் அருகே வந்த போது திடீரென சரக்கு வாகனம் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் பதற்றமடைந்த ஓட்டுநர் கார்த்திக் வாகனத்தை விட்டு இறங்கி ஓடினார். தகவல் அறிந்து நல்லி பாளையம் போலீசார், நாமக்கல் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 

இதனால் நாமக்கல்-திருச்செங்கோடு  சாலையில் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.