சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்!

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்கள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டத்தைக் கைவிட்டனர். 

News image
Updated On :6 அக்டோபர் 2023, 10:03 am

DIN

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்கள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டத்தைக் கைவிட்டனர். 

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

அதுபோல பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், நேற்று(வியாழக்கிழமை) தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் நிறைவாக, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தனர். பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 12,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

கோரிக்கை நிறைவேற்றப்படாததையடுத்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். 

தொடர்ந்து, இன்று பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். மூன்று மாதத்தில் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என அரசு உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.