மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

வலுவான கூட்டணி அமைக்க பாஜக தலைமை முடிவு!

சென்னையில் பாஜகவின் மையக் குழுக் கூட்டம் இன்று (அக். 10) நடைபெற்றது.

News image
கோப்புப் படம்
Updated On :10 அக்டோபர் 2023, 2:47 pm

DIN

வலுவான கூட்டணி அமைக்க பாஜக தேசிய தலைமை முடிவு செய்துள்ளதாக பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தெரிவித்துள்ளார். 

சென்னையில் பாஜகவின் மையக் குழுக் கூட்டம் இன்று (அக். 10) நடைபெற்றது. கடந்த அக். 5ஆம் தேதி நடைபெற்ற பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தைத் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மையக்குழு கூட்டத்தில்,  தேர்தல் பணிகள், கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

இதன்பிறகு பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழகம் முழுவதும் அனைத்து எம்.பி. தொகுதிகளிலும் 2 தேர்தல் பொறுப்பாளர்களை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக இதுவரை பெறாத வாக்கு சதவிகிதத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பணிகள் நடைபெறும்.

தென்தமிழகத்திலுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். பாஜக கடைநிலை பொறுப்பாளர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து தேர்தல் பணிகளை மேம்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.