இஸ்லாமிய கைதிகள் முன்விடுதலை: ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் கடிதம்

ஆளுநரிடம் நிலுவையில் இருக்கும் முன்விடுதலை தொடர்பான ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் கோப்புகளை பரிசீலித்து ஒப்புதல் வழங்குமாறு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கடிதம் எழுதியுள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

முன்விடுதலை தொடர்பான ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் கோப்புகளை பரிசீலித்து ஒப்புதல் வழங்குமாறு ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் நீண்ட நாள்களாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வது குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டது.

அதைத் தொடர்ந்து, ஆளுநரிடம் நிலுவையில் இருக்கும் முன்விடுதலை தொடர்பான ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் கோப்புகளை விரைந்து பரிசீலித்து ஒப்புதல் வழங்குமாறு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார். 

அந்தக் கடிதத்தில், “நெடுநாள் சிறைவாசம் அனுபவித்து வரும் சிறைவாசிகளை, மனிதாபிமான அடிப்படையில் சட்ட விதிகளுக்குட்பட்டு விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கிறது.

எனவே, தங்களுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் கோப்புகளை விரைவாக பரிசீலித்து, இந்திய அரசமைப்பின் உறுப்பு 161-இன் கீழ் முன்விடுதலை செய்ய ஒப்புதல் வழங்குமாறு கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com