நெல் பயிர்கள் நடவு பணியிலும் வட மாநில இளைஞர்கள்!
விவசாயப் பணிகளில் வடமாநில இளைஞர்கள் பங்கேற்று நெல் பயிர்கள் நடவுப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த வெங்கடேசபுரம் ஊராட்சியில் நடந்து வரும் விவசாயப் பணிகளில், வடமாநில இளைஞர்கள் பங்கேற்று நெல் பயிர்கள் நடவுப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த வெங்கடேசபுரம் ஊராட்சியில் சுமார் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் உள்ளன.
கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக துறையூர் பெரிய ஏரி, சின்ன ஏரி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் படிக்க.. இந்தியா - பாகிஸ்தான் போட்டி: காசாக்கப்படும் வெறுப்பு அரசியல்?
இதைத் தொடர்ந்து கிராமப்புறங்களில் விவசாயிகள் நெற்பயிர்கள் நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். துறையூர் அடுத்த வெங்கடேசபுரம் ஊராட்சி பகுதியில் பெண்கள் விவசாய பணிகளில் ஈடுபடாத காரணத்தால் வட மாநிலத்தைச் சேர்ந்த மேற்கு வங்காளம் பகுதியில் இருந்து வந்திருந்த சுமார் 15 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விவசாய நிலங்களில் நெல் நாற்றுகளை வயல்களில் நடவு செய்து வருகின்றனர்.
ஒரு ஏக்கர் நிலத்தில் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் நெல் பயிர்களை நட்டு வருகின்றனர். விவசாயப் பணிகளுக்கு பெண்கள் வராத காரணத்தினாலும் 100 நாள் பணியில் அதிக நாட்டம் காட்டுவதாலும் விவசாய பணிகள் தொய்வடைந்து வந்த நிலையில் விவசாயிகள் வேறு வழியின்றி வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களை விவசாயப் பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
பெரும்பாலும் வட மாநிலத்தவர்கள் இப்பகுதிகளில் சைக்கிளில் பானி பூரி விற்பது, தள்ளு வண்டியில் உணவுபொருள்கள் விற்பது, கம்பளி போர்வை உள்ளிட்டவை விற்பனை செய்து வந்தனர். மேலும் உணவகங்களில் பணிபுரிவது உள்ளிட்ட பணிகளை மட்டுமே செய்து வந்தனர்.
தற்பொழுது விவசாய பணிகளையும் வட மாநிலத்தவர் செய்வதால் தமிழகத்தில் விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...