47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கொளத்தூர், வில்லிவாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையங்கள்: ரூ. 1,817 கோடி ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட வழித்தடம் 5-ல் ரயில் நிலையங்கள் அமைப்பதற்காக டாடா பிராஜெக்ட்ஸ் நிறுவனத்துடன் ரூ. 1,817.54 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :13 அக்டோபர் 2023, 12:06 pm

DIN

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட வழித்தடம் 5-ல் ரயில் நிலையங்கள் அமைப்பதற்காக டாடா பிராஜெக்ட்ஸ் நிறுவனத்துடன் ரூ. 1,817.54 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஒப்பந்தத்தின் கீழ், வழித்தடம் 5ல் கொளத்தூர் சந்திப்பு, சீனிவாச நகர், வில்லிவாக்கம், வில்லிவாக்கம் பேருந்து நிலைய முனையம், வில்லிவாக்கம் எம்.டி.எச் சாலை என 5 சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. 

கொளத்தூர்  சந்திப்பு முதல் வில்லிவாக்கம் எம்.டி.எச். சாலை வரை இரட்டை துளையிடப்பட்ட சுரங்கங்கள், சாய்வு பாதைகள் உள்ளிட்ட பணிகள் இதில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Story image

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டத்தில் மூன்று வழித்தடங்களில் 116.1 கிமீ நீளத்தில் கட்டுமானம் மற்றும் தடம் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் 100% நிறைவு பெற்றுள்ளதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.