1500-க்கும்‌ மேற்பட்ட வாழை மரங்களை வெட்டிச் சாய்த்த மர்ம நபர்கள்!

1500-க்கும்‌ மேற்பட்ட வாழை மரங்களை வெட்டிச் சாய்த்த மர்ம நபர்கள்!

கொத்தமங்கலம் பகுதியில் 1500-க்கும்‌ மேற்பட்ட வாழை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சேதப்படுத்தியுள்ளனர்.   
Published on

கொத்தமங்கலம் பகுதியில் 1500-க்கும்‌ மேற்பட்ட வாழை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சேதப்படுத்தியுள்ளனர்.   

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியில் தர்மலிங்கம், நல்லசிவம், புலவர் சுப்பிரமணி ஆகியோரது தோட்டத்தில் இருந்த 1500-க்கும்‌ மேற்பட்ட வாழை மரங்களை மர்ம நபர்கள் நேற்று இரவு வெட்டி சேதப்படுத்தியுள்ளனர். 

மேலும் வழக்குரைஞர் சுப்பிரமணி என்பவரது தோட்டத்தில் இருந்த 100 பாக்கு மரங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் மர்ம நபர்கள் வெட்டி சேதப்படுத்தியுள்ளனர்.  

இச்சம்பவம் அப்பகுதியில்  உள்ள மக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. ஜேடர்பாளையம் பகுதியில் தொடரும் இச்சம்பவத்திற்கு காவல் துறையினர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com