அடுத்த 2 மாதங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

அடுத்த 2 மாதங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read


சென்னை: அடுத்த 2 மாதங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் ஹெல்த் வாக் சாலை ஆய்வு செய்த அமைச்சர் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் நவ.4 -ஆம் தேதி 38 மாவட்டங்களில் 8 கிலோ மீட்ட கொண்ட ஹெல்த் வாக் சாலை தொடங்கப்படவுள்ளது.  பெசன்ட் நகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 

நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் வசதிக்காக காலை 5 முதல் 8 மணி வரை பெசன் நகர் அவன்யூ பகுதி சாலைகளில கனரக வாகனங்கள் வந்து செல்ல அனுமதி இல்லை. 

மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை சுகாதாரத் துறையின் சார்பில் ஹெல்த் வாக் நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாமும் நடைபெற உள்ளது. 

கரோனா காலத்திற்குப் பிறகு சமீபகாலமாக இளம் வயதினர் உள்பட பலருக்கு மாரடைப்பு அதிகரித்து வருகிறது. மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரித்துள்ள நிலையில் நடைபயிற்சியும், உடற்பயிற்சியும் அவசியம். 

கடந்த பத்து மாதங்களில் 5,600 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் இறந்துள்ளனர். வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், அனைத்திந்திய ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான காலியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் உள்ளன. காலியிடங்களை மாநில அரசே நிரப்பிக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுள்ளது. 

சட்ட வல்லுநர்களுடன் பேசி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com