திருவள்ளூர் மாவட்டத்தில் 33.34 லட்சம் வாக்காளர்கள்

 திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, மொத்தமுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 33 லட்சத்து 34 ஆயிரத்து 786 வாக்காளர்கள் உள்ளனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, மொத்தமுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 33 லட்சத்து 34 ஆயிரத்து 786 வாக்காளர்கள் உள்ளனர். 

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 1.1.2024 ஐ தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் 2024 ஆம் ஆண்டுக்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக வெள்ளிகிழமை (அக்.27) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 

இந்தப் பட்டியலில் 10 தொகுதிகளிலும் சேர்த்து 33,34,786 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் வெளியிட்டார்.

இந்தப் பட்டியலானது மாவட்டம் முழுவதும் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் (கோட்டாட்சியர் அலுவலகம்), உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்கள் (வட்டாட்சியர் அலுவலகம்), வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் பார்வைக்கும்  வைக்கப்பட உள்ளது.

இந்தப் பட்டியலை பொதுமக்கள் பார்வையிட்டு சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணியில் பங்கேற்கலாம். புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், தொகுதி மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்துக்கும் அதற்கான படிவங்களை வழங்கி பட்டியலில் திருத்தம் செய்து கொள்ளலாம்.

மேலும் அக்.27ஆம் தேதி தொடங்கி டிச.9ஆம் தேதி வரை சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், நவ.4, 5, 18,19 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவும் உள்ளன. இந்த முகாம்களிலும் பொதுமக்கள் படிவங்களை வழங்கி திருத்தப் பணிகளை மேற்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார். 

தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் பொன்னேரி-2,52,774, திருத்தணி-2,67,872, கும்மிடிப்பூண்டி-2,68,088, திருவள்ளூர்-2,57,811,பூந்தமல்லி -3,62,243, ஆவடி-4,31,908, மதுரவாயல்-4,17,157, அம்பத்தூர்-3,51,863, மாதவரம்-4,52,568, திருவொற்றியூர்-2,72,502 என ஆண்கள்-16,47,943, பெண்கள்-16,86,123, மாற்று இனத்தினர்-720 என மொத்தம்-33,34,786 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com