சந்தேகத்தின் பேரில் மனைவி அம்பிகாபதியை வீட்டு வாசலில் வெட்டி கொலை செய்துவிட்டு கணவர் லட்சுமணன் தலைமறைவாகியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், குமரன் நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன் (45). இவர் விளாத்திகுளத்தில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்பிகாபதி (40). இவர் விளாத்திகுளம் அருகே உள்ள ராமச்சந்திராபுரத்தில் ரேஷன் கடை ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு சிவ பெருமாள் (13) என்ற மகனும், மகாலட்சுமி (11) மகளும் உள்ளனர்.
இந்நிலையில் அம்பிகாபதிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு நபருக்கும் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது லட்சுமணனுக்கு தெரிய வரவே கணவன் மனைவி இருவருக்கும் இடையே சந்தேகத்தின் பேரில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் இன்று நண்பகலில் தம்பதியர் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த கணவர் லட்சுமணன், மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவி அம்பிகாபதியை வீட்டு வாசலின் அருகே விரட்டி சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெட்டிக் கொலை செய்யப்பட்ட அம்பிகாபதியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க: காளையார்கோவிலில் மருதுபாண்டியர்களின் 222-வது குருபூஜை விழா
இந்த சம்பவம் தொடர்பாக விளாத்திகுளம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து தலைமறைவான லட்சுமணனை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாற்றத்துக்கான 'விசில்'

வரலாறு படைத்தது தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி!
வரலாறு படைத்தது தவெக! தனிப்பெரும் கட்சியாக வெற்றி!
அன்று ஆந்திரத்தில் என்டிஆர்; இன்று தமிழகத்தில் விஜய்!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


