

புதுக்கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் பேரனும், உதயநிதியின் மகனுமான இன்பநிதி பாசறை என்ற பெயரில் போஸ்டர் அடித்த திமுகவைச் சேர்ந்த இருவர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இன்பநிதி பாசறை என்ற பெயரில் வரும் செப். 24ஆம் தேதி புதுக்கோட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாகக் குறிப்பிட்டு 'எதிர்காலமே' என்ற போஸ்டர் சனிக்கிழமை மாலை சமூக ஊடகங்களில் பரவியது.
இதையும் படிக்க: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,430 கன அடி!
இந்த நிலையில் அந்த போஸ்டரை வெளியிட்ட புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் துணை அமைப்பாளர் வடவாளம் க.செ. மணிமாறன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மு.க. திருமுருகன் ஆகியோரை தற்காலிக நீக்கம் செய்து திமுக பொதுச்செயலர் துரைமுருகன் ஞாயிற்றுக்கிழமை காலை அறிவித்துள்ளார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கிலும் செயல்பட்டதால் அவர்களை நீக்கியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.