இந்தியா பெயர் மாற்றத்திற்குப் பின்னால் அரசியல் இருக்கிறது: கனிமொழி கருத்து

இந்தியாவின் பெயரை மாற்றுவதற்குப் பின்னால் அரசியல் இருக்கிறது, இந்தியர்களின் மனதை புண்படுத்திவிட்டார்கள் என்று திமுக எம்.பி. கனிமொழி பேசினார்.
இந்தியா பெயர் மாற்றத்திற்குப் பின்னால் அரசியல் இருக்கிறது: கனிமொழி கருத்து

இந்தியாவின் பெயரை மாற்றுவதற்குப் பின்னால் அரசியல் இருக்கிறது, இந்தியர்களின் மனதை புண்படுத்திவிட்டார்கள் என்று திமுக எம்.பி. கனிமொழி பேசினார்.

இந்தியா என்ற பெயரை 'பாரதம்' என மாற்றும் நோக்கில் மத்திய பாஜக அரசு செயல்படுவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், 

'அரசியலமைப்புச் சட்டத்தில் 'பாரதம்' இருப்பதாகச் சொல்வார்கள். இரண்டு வார்த்தைகளுமே அதில் உள்ளன. மேடைகளில் பேசுகிறவர்கள்கூட இந்த இரண்டு பெயர்களையும் பயன்படுத்துகிற சூழல்தான் இருந்து வருகிறது. 

ஆனால், ஒன்றை நினைவு வைத்துக்கொள்ள வேண்டும். எப்போதுமே இந்திய பிரதமர், இந்திய குடியரசுத்தலைவர் என்றுதான் அழைப்பிதழ்களில் இருக்கும். திடீரென தேவையில்லாமல் ஒரு சர்ச்சையை கிளப்பக்கூடிய வகையில், பாரத குடியரசுத் தலைவர் என்பதும், இந்தியாவின் பெயரை பாரதம் என்று மாற்றப்போகிறோம் என்று கூறுவதற்குப் பின்னால் இருக்கக்கூடியது ஒரு அரசியல். அதை நாம் எதிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுகிறோம்.

இன்னொருவிதமாகவும் பார்க்கலாம். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற பெயரில் ஒரு தளத்தில் ஒன்றிணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கியிருக்கும்போது, அந்தப் பெயரே  மத்திய அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய சூழலில்தான் பெயரையே மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். 

அவர்கள் வரலாற்றை மாற்றுவார்கள், பெயர்களை மாற்றுவார்கள், சட்டங்களுக்குக்கூட இந்தியில் பெயர் வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். திட்டங்களுக்குக்கூட புரியாத பெயர்களை வைக்கும் சூழ்நிலையில், இந்தியா என்ற பெயரையும் மாற்றுவது அவர்களுக்கு சாதாரண ஒன்றாகத் தோன்றலாம். ஆனால் இது எத்தனை இந்தியர்களின் மனதை புண்படுத்துகிறது, இந்தியர்களின் மனதை புண்படுத்தக்கூடாது என்று அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்' என்று பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com