டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நாட்றம்பள்ளி அருகே வேன் மீது லாரி மோதல்: ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பெண்கள் பலி

நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சராகி நின்றுகொண்டிருந்த வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உயிரிழந்தனர்.  

News image
Updated On :11 செப்டம்பர் 2023, 2:48 am

DIN

நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சராகி நின்றுகொண்டிருந்த வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உயிரிழந்தனர். 

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த ஓணாங்குட்டை கிராமத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் கடந்த 8ஆம் தேதி 2 வேன்களில் கர்நாடக மாநிலம் தர்மஸ்சாலாவிற்கு சுற்றுல்லா சென்றுள்ளனர். பின்னர் திங்கள்கிழமை அதிகாலை அனைவரும் சுற்றுலாவை முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்த போது திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த சண்டியூர்  பகுதியில்  பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 3 மணியவில் வேன் பஞ்சராகி நடுசாலையில் நின்றது.

இதனையடுத்து  வேன் ஓட்டுநர்  வேனை சாலையிலேயே நிறுத்தியிருந்த நிலையில் வேனில் இருந்தவர்கள்  சாலையிலேயே நடுவே உள்ள சென்டர் மீடியத்தில் உள்ள புல்தரையில் அமர்ந்து பேசி கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது அதே சாலையில் வேகமாக வந்த ஈச்சர் லாரி பஞ்சராகி நின்றுக் கொண்டிருந்த வேன் மீது அதிவேகமாக மோதியது. மோதிய வேகத்தில் பஞ்சராகி இருந்த வேன் சாலையில் நடுவே சென்டர் மீடியத்தில் அமர்ந்து பேசி கொண்டிருந்தவர்கள் மீது மோதி எதிர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  

இதில் 7 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் இவ்விபத்தில்  படுகாயம் அடைந்த லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக வாணியம்பாடி, நாட்றம்பள்ளி மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மூன்று பேரை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனைத்தொடர்ந்து இவ்விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து  நாட்றம்பள்ளி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்தனர். முதற்கட்ட  விசாரணையில் உயிரிழந்த பெண்கள் மீரா (வயது 50), தெய்வானை (வயது 32), சேட்டுயம்மாள், (வயது 50) தேவகி,(வயது 50) சாவித்திரி, (வயது42) கலாவதி, (வயது50) கீதாஞ்சலி (வயது32) என்பது என தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.