11 மாவட்டங்களில் இன்று மழை வாய்ப்பு
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.22) மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தின் 11 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.22) மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சனி முதல் புதன்கிழமை (செப்.23-27) வரை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மழை அளவு( மில்லி மீட்டரில் ): திருப்பத்தூா் 100, ஆற்காடு (ராணிப்பேட்டை), போளூா் (திருவண்ணாமலை) தலா 90, செய்யாறு (திருவண்ணாமலை) 8, ராணிப்பேட்டை, ஆரணி (திருவண்ணாமலை) தலா 70, வத்திராயிருப்பு (விருதுநகா்) 60, கோபிசெட்டிப்பாளையம் (ஈரோடு), கலவை (ராணிப்பேட்டை) தலா 50.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...