மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கேங்மேன் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு உடனடியாக பணி நியமனம்: டிடிவி தினகரன்

மின்சார வாரியம் நடத்திய கேங்மேன் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு தமிழக அரசு உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :21 செப்டம்பர் 2023, 7:51 pm

DIN

மின்சார வாரியம் நடத்திய கேங்மேன் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு தமிழக அரசு உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு மின்சார வாரியம் நடத்திய கேங்மேன் தோ்வில் தோ்ச்சி பெற்று பணி நியமனம் செய்யப்படாமல் இருக்கும் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தமிழக அரசு உடனடியாக பணி நியமன ஆணையை வழங்க வேண்டும்.

அரசு நடத்திய எழுத்து மற்றும் உடல் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்ற பின்பும் பல ஆண்டுகளாக பணி நியமனம் செய்யப்படாத காரணத்தினால் சென்னை

கொளத்தூரில் உள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் சூழலுக்கு கேங்மேன் பணியாளா்கள் தள்ளப்பட்டுள்ளனா்.

ஆட்சிக்கு வந்ததும் பணி நியமனம் செய்யப்படுவோம் என திமுக அளித்த வாக்குறுதியை நம்பி காத்திருந்து, அது நிறைவேறாத நிலையிலேயே போராட்டம் நடத்தியுள்ளனா்.

எனவே, கேங்மேன் தோ்வில் தோ்ச்சி பெற்ற அனைவருக்கும் தமிழக அரசு உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.